தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள் நடைபெறும் தேதி அறிவிப்பு! - தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாஹூ

சென்னை: வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள் நடைபெறும் தேதியை தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாஹூ அறிவித்துள்ளார்.

voters list
voters list

By

Published : Nov 3, 2020, 9:33 PM IST

இது தொடர்பாக தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாஹூ, அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் சென்னையில் இன்று (நவம்பர் 2) ஆலோசனை நடத்தினார். அப்போது முடிவு செய்யப்பட்ட படிவங்கள் பற்றிய தகவல்களும், சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2021இன் கால அட்டவணைகளும் பகிர்ந்து கொள்ளப்பட்டன. மேலும், 2020ஆம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட 14.2.2020ஆம் தேதி முதல் 31.10.2020 வரை கோரிக்கைகள் மற்றும் மறுப்புரைகள் தொடர்பாக மொத்தம் 9 லட்சத்து 48 ஆயிரத்து 512 படிவங்கள் பெறப்பட்டன.

இதையடுத்து, இந்திய தேர்தல் ஆணையம் கீழ்க்கண்ட கால அட்டவணையை 2021 சிறப்பு சுருக்க முறை திருத்தத்துக்காக அறிவித்துள்ளது. அதன்படி,

* ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நாள்: 16-11-2020
* கோரிக்கை மற்றும் மறுப்புரைகள் 16-11-2020 முதல் விண்ணப்பிக்கும் காலம் 15-12-2020 வரை
* சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்கள்: 21-11-2020 (சனிக்கிழமை) 22-11-2020 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 12-12-2020 (சனிக்கிழமை), 13-12-2020 (ஞாயிற்றுக்கிழமை)
* இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நாள்: 20-01-2021 (புதன்கிழமை)
* தேசிய வாக்காளர் தினம் 25-1-2021 (திங்கள் கிழமை)

* இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் நிலை முகவர்களை நியமிக்கலாம் என்றும், அந்த முகவர்கள் சிறப்பு முகாம்கள் நடக்கும் தேதிகளில் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களை சரிபார்க்க உதவி செய்யலாம். முகவர்கள், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள இறந்த மற்றும் இடம் பெயர்ந்த வாக்காளர்கள் பற்றி வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட படிவங்களில் தகவல் தெரிவிக்கலாம்.

இக்கூட்டத்தில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2021இன் வழிமுறைகள் மற்றும் கால அட்டவணைகள் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. அரசியல் கட்சி பிரதிநிதிகளின் ஆலோசனைகளும் இக்கூட்டத்தில் பெறப்பட்டன.

ABOUT THE AUTHOR

...view details