இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் கோவிட் பாதுகாப்பு மையங்கள், மருத்துவமனை படுக்கை வசதிகள், ஆர்டி பிசிஆர், கரோனா தடுப்பூசி குறித்த தகவல்கள், மயான பூமி குறித்த தகவல்கள் உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்ள 1913 என்ற எண்ணிலும் 044-2538 4520 என்ற கட்டுப்பாட்டு அறை எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் மாநகராட்சியின் சார்பில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு மன நல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக பெருநகர சென்னை மாநகராட்சி தலைமையிடத்தில் 100 இணைப்புகள் கொண்ட மனநல ஆலோசனை மையம் செயல்பட்டுவருகிறது.