மத்தியப் பல்கலைக்கழகங்களில் கல்லூரிப் படிப்பில் சேர நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வுத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று காலமாக, சில மாதங்களாக பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டிருந்தன. இதனால் மத்தியப் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்க்கை நிறுத்தப்பட்டிருந்தது.
நுழைவுத் தேர்வு
இதனால் கல்லூரிகளில் விண்ணப்பித்திருந்த மாணவர்கள், நுழைவுத் தேர்வை எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் இன்று (ஆக. 16) கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.
அதன்படி, முதற்கட்டமாக தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் உள்பட 12 மத்தியப் பல்கலைக்கழகங்களில் சேர, பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.
மத்தியப் பல்கலைக்கழகங்களில் பொது நுழைவுத் தேர்வு தேதி அறிவிப்பு 2021-2022ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் ஏற்கெனவே கூறியிருந்தது.
அதன்படி, பொது நுழைவுத் தேர்வு செப்டம்பர் மாதம் 15, 16, 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்தப் பொது நுழைவுத் தேர்வானது 2 மணி நேரம் கணினி வழியில் நடத்தப்படுகிறது.
இந்தத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்குத் தவறான பதில் ஒன்றுக்கு 0.25 மதிப்பெண் குறைக்கப்படும். இந்நிலையில் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.
மத்தியப் பல்கலைக்கழகங்களில் படிக்க விரும்புவோர், தங்களுக்கு ஏற்ற படிப்புகளைத் தேர்வுசெய்து செப்டம்பர் 2ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் குறித்த சந்தேகம் மற்றும் கூடுதல் தகவல்களுக்கு cucet.nta.nic.in என்ற இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: 'பி.இ, பி.டெக் படிப்பு - 1 லட்சத்து 51 ஆயிரத்து 992 மாணவர்கள் ஆன்லைனில் பதிவு'