தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு - Release of AIADMK candidate list for rural local elections

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

By

Published : Sep 20, 2021, 6:52 PM IST

Updated : Sep 20, 2021, 10:11 PM IST

18:47 September 20

தமிழ்நாட்டில் வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்களில், வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவோருக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 15ஆம் தேதி தொடங்கியது.  அதிமுக சார்பில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டது. இடைத்தேர்தல் நடைபெறும் இடங்களுக்கும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.  

9  மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றிய வார்டு உறுப்பினர் ஆகிய உறுப்பினர் பதவிக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். 

இதையும் படிங்க: ‘லஞ்ச ஒழிப்புத் துறையினர் அளித்த தகவல் தவறானது’ - கே.சி வீரமணி

Last Updated : Sep 20, 2021, 10:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details