சென்னையில் உள்ள மத்திய அரசு பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குநராக எம்.அண்ணாதுரை இன்று (நவ.04) பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக, அவர் சென்னையில் உள்ள பொதிகை தொலைக்காட்சி செய்தி பிரிவு இயக்குநராகவும், மண்டல மக்கள் தொடர்பு அலுவலகத்தின் இயக்குநராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
பத்திரிகை தகவல் அலுவலகம் - கூடுதல் தலைமை இயக்குநராக எம்.அண்ணாதுரை பொறுப்பேற்பு! - press information bureau
சென்னை: பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குநராக எம்.அண்ணாதுரை பொறுப்பேற்றுக் கொண்டார்.

annathurai
அத்துடன் நிதி, சட்டம், செய்தி ஒலிபரப்பு, துணிநூல் துறை அமைச்சர்களின் தனிச் செயலராகவும், பணி அலுவலராகவும் பணியாற்றி உள்ளார். மேலும், 1995ஆம் ஆண்டு குடிமைப் பணியாளர் தேர்வில் வெற்றி பெற்று இந்திய தகவல் பணியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பத்திரிகை தகவல் மையத்தின் தலைவருக்கு கரோனா