தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சர்ச்சையில் அண்ணாமலை பல்கலை., - புரோகிராமர்களுக்கு உதவிப் பேராசிரியர்கள் பணி! - முறைகேடு

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கணினி புரோகிராமர்களுக்கு உதவிப் பேராசிரியர்கள் பணி வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகி உள்ள தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

annamalai university scam revealed
annamalai university scam revealed

By

Published : Jul 25, 2021, 5:44 PM IST

சென்னை: தமிழ்நாடு அனைத்து அரசு கல்லூரி யுஜிசி தகுதி கவுரவ விரிவுரையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் வெ. தங்கராஜ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, “அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இட ஒதுக்கீடு பின்பற்றாத மற்றும் அனுமதிக்கப்பட்ட பணியிடத்தை விட கூடுதலான நபர்களை உதவி பேராசிரியர்களாகவும், ஆசிரியரல்லா பணியாளர்களாகவும் அண்ணாமலை பல்கலைகழகத்தின் வாரிசுகள் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு தங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு பணி வழங்கியுள்ளனர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஒப்பளிக்கப்பட்ட 860 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு பதிலாக, 3000க்கும் மேற்பட்ட நபர்களை உதவிப் பேராசிரியர்களாகவும், 1,110 ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு பதிலாக 9,000க்கும் மேற்பட்ட நபர்களை பணியாளர்களாகவும் பல்கலைக்கழகம் நியமித்துள்ளது.

ஆசிரியர் சேர்க்கையில் குளறுபடி

அதிலும், கணினி புரோகிராமராக 2002, 2004, 2006ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த நபர்களைக் உதவிப் பேராசிரியர்களாக பதவி உயர்வு வழங்கி தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசு கல்லூரிகளுக்கு பணி நிரவல் செய்துள்ளனர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறை 2015ஆம் ஆண்டு தான் துவங்கப்பட்டுள்ளது. ஆனால் பல்கலைக்கழகம் 2013ஆம் ஆண்டே அரசு கட்டுப்பாட்டிற்கு வந்துவிட்டது. இத்தகைய சூழலில் கணினி அறிவியல் துறையில் 187 நபர்கள் எவ்வாறு உதவி பேராசிரியர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளார்கள்.

அதிலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் தற்போது கணினி அறிவியல் உதவி பேராசிரியராக சம்பளம் பெற்று வருபவர்களுக்கு பணி அனுபவம் 14 வருடம் 13 வருடம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களில் பெரும்பாலான நபர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வெவ்வேறு துறைகளில் கணினி புரோகிராமர் என்ற பதவியில் இருந்து கொண்டு தொலைதூரக்கல்வி மையத்தில் விண்ணப்பங்களை விற்கும் பணிகளையும், விண்ணப்பங்களை தரம் பிரிக்கும் பணிகளையும், ஒரு சிலர் கல்வி கட்டணம் வசூல் செய்யும் பணியையும் மேற்கொண்டு வந்துள்ளனர்.

தகுதியற்ற ஆசிரியர்கள்

இவர்களில், 70 விழுகாட்டுக்கும் அதிகமானோர் அப்பல்கலைக் கழகத்தில் பணியில் சேர்ந்து பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் தொலைதூர வழிக் கல்வி மூலம் பட்டம் பெற்றுள்ளனர். இதனை வைத்து தான் பெரும்பாலும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

யுஜிசி வழிகாட்டுதலுடன் பணியில் சேராதவர்களுக்கு முறையான கல்வி தகுதி இல்லாதவர்களுக்கு யுஜிசி பரிந்துரைத்ததற்கு சமமான சம்பளத்தை தமிழ்நாடு அரசானது மக்களின் வரிப்பணத்திலிருந்து சிறப்பு நிதி என்ற பெயரில் ஒதுக்கி ஒவ்வொரு ஆண்டும் சம்பளம் வழங்கி வருகிறது.

இட ஒதுக்கீடு பின்பற்றப்படாமல் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அண்ணாமலை பல்கலைக்கழகமே தகவல் உரிமை சட்டத்தின் வாயிலாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அளித்த பதிலில் விளக்கமளித்துள்ளது.

அளவுக்கு அதிகமாக நிரப்பப்பட்ட பணியிடங்கள்

ஒட்டு மொத்தமாக ஒப்பளிக்கப்பட்ட 890 ஆசிரியர் பணியிடங்கள், 1110 ஆசிரியர் பணியிடங்கள் என இரண்டையும் சேர்த்து சுமார் 2,000 பணியிடங்கள் மட்டுமே, இட ஒதுக்கீட்டைப் பின்பற்றி நிரப்பப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் 13,000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

ஆனால், தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரிகளில் தொகுப்பூதியத்தில் முறையான கல்வித் தகுதியுடன் பணியாற்றி வரும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு, 5 ஆயிரம் 6,000 எனவும், கவுரவ விரிவுரையாளர்களுக்கு 10, 15 ஆயிரம், தற்போது 20 ஆயிரம் என வழங்கி வருகின்றனர் என அதில் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details