சென்னை:குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தின்போது நேற்று (பிப்ரவரி 2) ராகுல் காந்தி, மத்திய அரசை விமர்சித்தார். மோடியை கடுமையாகத் தாக்கிப் பேசினார். மேலும், தமிழ்நாட்டில் பாஜகவால் தனது வாழ்நாளில் ஒருபோதும் ஆட்சிக்கு வரவே முடியாது என்று ஆவேசமாகப் பேசினார்.
இவரது பேச்சுக்கு மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் பதிலடி கொடுத்துவருகின்றனர். அந்த வகையில் அண்ணாமலை அவரது ட்வீட்டில், "நேற்று நாடாளுமன்றத்தில் திடீரென ராகுல் காந்தி ஆவேசமாகப் பேசியது எப்போதும்போல் சிரிப்புதான் வருகிறது.
அப்போது அவர், 'தமிழ்நாட்டில் பாஜக ஒருபோதும் ஆட்சிக்கு வரவே முடியாது' என்று சம்பந்தமில்லாமல் ஏகபோக வசனத்தில் பேசியிருக்கிறார். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று இந்த மாபெரும் தமிழ் மண்ணின் மகனாக ராகுல் காந்திக்கு வழிகாட்டுவேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
1. நீங்கள் ஒரு கட்சியாக தமிழ்நாட்டை சில காலம் ஆட்சி செய்தீர்கள். 1965ஆம் ஆண்டு உங்கள் தாத்தாவும், 1986ஆம் ஆண்டு உங்கள் தந்தையும் இந்தியைக் கட்டாயமாக்கினர். தயவுசெய்து தற்போதைய தேசிய கல்விக் கொள்கையைப் படியுங்கள்!
2. பெருந்தலைவர் காமராஜரை அவமானப்படுத்தினீர்கள்.
3. 1974ஆம் ஆண்டு உங்கள் பாட்டியால் கச்சத்தீவு வெளிநாட்டுக்குத் தாரைவார்க்கப்பட்டது.
4. இலங்கையில் இலங்கைத் தமிழர்களுக்கு நேர்ந்தவற்றிற்கு உங்கள் கட்சிதான் காரணம்.