தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திமுக, பாஜக கூட்டணி வராது - அண்ணாமலை - 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி

எந்த நிலையிலும் திமுக, பாஜக கூட்டணி வராது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜி மீது தனிப்பட்ட வன்மம் கிடையாது
செந்தில் பாலாஜி மீது தனிப்பட்ட வன்மம் கிடையாது

By

Published : Jul 29, 2022, 12:09 PM IST

சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் நேற்று(ஜூலை.28) 4-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் ராஜ்பவன் சென்ற மோடியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்தனர்.

பின்னர் ஆளுநர் மாளிகை முன்பு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, ”தமிழ்நாடு அமைச்சர், செந்தில் பாலாஜி பாஜக தலைவர் அண்ணாமலையை விவாதத்திற்கு அழைத்தது குறித்த கேள்விக்கு, அமைச்சர் செந்தில்பாலாஜி ஏன் இவ்வளவு கோபப்படுகிறார் என தெரியவில்லை. ஆண் மகன் என ஏன் கூறினார் என தெரியவில்லை, மக்களுக்கு பதில் சொல்ல வேண்டியது அமைச்சரின் கடமை என அண்ணாமலை குறிப்பிட்டார்.

மத்திய அரசு சொல்லியதால், மின் கட்டணத்தை உயர்த்தியதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். அப்படி மத்திய அரசு கூறிய அந்த கடிதத்தை காட்டுங்கள் என தான் கேட்டோம். அதற்கு அவர் கோபப்பட்டு ஏதேதோ பேசுகிறார். இந்த விவகாரத்தில் ஆண்மகன் என ஏன் பேச வேண்டும் என கேள்வி எழுப்பினார்.

அப்படி என்றால் பெண்களுக்கு தைரியம் இருக்காதா, வேலு நாச்சியார் பிறந்த ஊரில் உள்ள பெண்களுக்கு வீரம் இல்லையா பெண்களை அமைச்சர் செந்தில் பாலாஜி கேவலப்படுத்துகிறாரா என கேள்வி எழுப்பினார். செந்தில் பாலாஜி தவறு செய்கிறார், எனவே அதை நாங்கள் கோடிட்டு காட்டுகிறோம் தனிப்பட்ட வன்மம் கிடையாது என விளக்கமளித்தார்.

மின் துறையில் ஏகப்பட்ட குழப்பங்கள், குளறுபடிகள் நடந்திருப்பதாக விமர்சித்த அண்ணாமலை, இவை அனைத்தையும் மக்கள் பார்த்து கொண்டிருப்பதாகவும் நல்லது நடக்கும் எனவும் கூறினார். மேலும் முதலமைச்சர் ஸ்டாலின், சிறந்த முதலமைச்சராக நேற்று நடந்து கொண்டார் என தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் கலாச்சாரம், பண்பாட்டை உலகறிய செய்த கலை நிகழ்ச்சி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. திமுகவுடன் பாஜக எந்த சூழ்நிலையும் கூட்டணி வராது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் விமான நிலையம் வருகை

ABOUT THE AUTHOR

...view details