செங்கல்பட்டு: பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக பதவியேற்ற 2014ஆம் ஆண்டுமுதல் ஒவ்வொரு மாத இறுதி ஞாயிற்றுக்கிழமைகளிலும் 'மன் கி பாத்' என்ற வானொலி நிகழ்ச்சி மூலமாக நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.
இதில் 88ஆவது நிகழ்ச்சியாக நேற்று(ஏப். 24) பிரதமர் மோடி வானொலி மூலம் பொதுமக்களுக்கு உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியை செங்கல்பட்டு மாவட்ட பாஜக சார்பில் நெடுங்குன்றம், பாலையா கார்டன் பகுதியில் எல்.இ.டி திரை அமைக்கப்பட்டு, பிரதமரின் உரையை நேரடியாக பொதுமக்கள் கேட்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மன் கி பாத்: இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அகில இந்திய பொதுச்செயலாளர் சி.டி.ரவி ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசுகையில், "அடுத்த மாதம் நடைபெற உள்ள 'மன் கி பாத்' நிகழ்ச்சியை செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 2373 பாஜக கிளைகளிலும் பிரதமரின் உரையை பொதுமக்கள் கேட்க ஏற்பாடு செய்யவேண்டும்.