சென்னை: திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா சமீபத்தில் இந்துக்கள் பற்றி பேசும் காணொளி சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த காணொளியை பகிர்ந்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவாக பேசி மற்றவர்களை திருப்திபடுத்துவதற்காக ஆ. ராசா இப்படி பேசுகிறார். மேலும் இந்த தலைமையின் கீழ் தமிழ்நாடு இருப்பது துர்தர்ஷ்டவசமானது என கூறியுள்ளார்.
சில நாட்களுக்கு முன் திமுக சார்பில் நாமக்கல்லில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய ஆ ராசா, ”பிரிவினை வேண்டும், தனித்தமிழ்நாடு வேண்டும். இளைஞர்களே முன் வாருங்கள். பேட்ஜ் அணிந்து கொள்ளுங்கள். சுதந்திர தமிழ்நாடு தான் நம்முடைய கடைசி தீர்வு' என்று பெரியார் சொன்னார். பெரியாரை முழுமையாக ஏற்றுக் கொண்ட நாங்கள் அதிலிருந்து விலகி, ஜனநாயகத்திற்காக இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக, எங்கள் தந்தையையும் ஒதுக்கிவிட்டு, 'இந்தியா வாழ்க' என கூறி வருகிறோம் என கூறினார்.