தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

முதுகலை பொறியியல் படிப்பிற்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு - முதுகலைப் பொறியியல் படிப்பிற்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு

தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட் 2022) எழுதுவதற்கு வரும் மார்ச் 30ஆம் தேதி முதல் ஏப்ரல் 18ஆம் தேதி மாலை 4 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணாப் பல்கலைக்கழகம்
அண்ணாப் பல்கலைக்கழகம்

By

Published : Mar 27, 2022, 1:26 PM IST

Updated : Mar 27, 2022, 1:31 PM IST

சென்னை:தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு 2022 குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைகள், அதன் உறுப்புக்கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகத்தின் மண்டல கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் சுயநிதி பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய முதுகலைப் பட்டப்படிப்புகளில் மாணவர்கள் 2022-23ஆம் கல்வியாண்டில் சேரலாம். மேலும் சில பல்கலைக்கழகம் மற்றும் தனியார் கல்லூரிகள் டான்செட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேரலாம்.

எம்.பி.ஏ, எம்.சி.ஏ மற்றும் எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய பட்டப் படிப்பிற்கான ( TAMIL NADU COMMON ENTRANCE TEST - TANCET ) நுழைவுத் தேர்வினை எழுதுவதற்கு மார்ச்30 ஆம் தேதி முதல் ஏப்ரல் 18ஆம் தேதிவரை https://tancet.annauniv.edu/tancet/என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம், மேலும் விபரங்களை இந்த இணையதளத்தில் சென்று தெரிந்துக் கொள்ளலாம்.

நுழைவுத் தேர்வு அறிவிப்பு

ஹால் டிக்கெட்:ஆன்லைனில் விண்ணப்பம் செய்யும்போது மாணவர்கள் பயன்படுத்தும் மின்னஞ்சல், செல்போன் எண்ணை பயன்படுத்த வேண்டும். தேர்வுக்கட்டணத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும். இவர்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு மே 2ஆம் தேதி வெளியிடப்படும். எம்.சி.ஏ. படிப்பிற்கு மே 14ஆம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரையும், எம்.பி.ஏ.படிப்பிற்கு மே 14ஆம் தேதி மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரையும், எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் படிப்பிற்கு மே 15ஆம் தேதி காலை 10 மணி முதல் 12 மணிவரை நுழைவுத் தேர்வு நடைபெறும்.

தேர்வு மையங்கள்:இவர்களுக்கான தேர்வு தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், சிதம்பரம், திண்டுக்கல், ஈரோடு, காரைக்குடி, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய 14 நகரங்களில் தேர்வு நடத்தப்படும்" எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நாடார் வங்கி ? நாடார்களிடமே இருக்குமா?

Last Updated : Mar 27, 2022, 1:31 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details