சென்னை:அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சூரப்பா கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி நியமிக்கப்பட்டார். அப்போது அவரது நியமனத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து பல்வேறு போராட்டங்களும், சர்ச்சைகளும் வெடித்தன.
மேலும் பல்கலைக்கழகத்திற்கு சீர்மிகு அந்தஸ்தை பெறுவது, மாநில அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு கொள்கையை அமுல்படுத்த முயன்றது போன்ற சர்ச்சைகளும் ஏற்பட்டது.
இந்த நிலையில் அவரது பதவி காலம் இன்றுடன் முடிவடைகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கு பதவி நீடிப்பு வழங்குவதற்குச் சட்டத்தில் இடமில்லை. எனவே பல்கலைக்கழகத்தை நிர்வாகம் செய்வதற்கு உயர்கல்வித்துறை செயலாளர் தலைமையில் நிர்வாக குழு அமைக்கப்படலாம் எனத் தெரிகிறது. ஏற்கனவே, புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேர்வு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:'கிழக்குக் கடற்கரை ரயில் பாதை திட்டத்தை அரசு கைவிடக் கூடாது’ - ராமதாஸ்