அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் சங்கத் தலைவர் அருள் அறம், செயலாளர் சந்திரமோகன் ஆகியோர் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ” சட்டப்பேரவையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றம் செய்வதற்கான சட்ட மசோதா அண்மையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு நாங்கள் எதிர்ப்பை தெரிவிக்கிறோம்.
கிண்டி பொறியியல் கல்லூரி, மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, கட்டடக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளி ஆகியவை கடந்த 42 ஆண்டுகளாக அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன.. பல்கலைக்கழகத்தின் பெயரில் தரவரிசை, ஆய்வுக் கட்டுரைகள், ஆராய்ச்சிக்கான ஒப்பந்தங்கள் உள்ளிட்டவை செய்யப்பட்டுள்ளன.