தமிழ்நாடு சட்டப்பேரவையில், அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் எனப் பெயர் மாற்றம் செய்து சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அவசர பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், பல்கலைக்கழகத்தினைப் பிரித்து பெயரை மாற்றுவதால் உலகளவில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உள்ள நற்பெயர் போய்விடும் என்றும், அரசின் முடிவுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் இன்று முதல் பணியாளர்கள் அனைவரும் கறுப்புப் பட்டை அணிந்து பணியில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது என்றும் அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் இன்று கறுப்புப் பட்டை அணிந்து பணிபுரிந்து வருகின்றனர். இது குறித்து, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் சக்திநாதன் பேசும்போது,'உலகளவில் அறியப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து பெயர் மாற்றம் செய்வதால், அதற்குரிய அங்கீகாரம் பறிபோய்விடும். அனுமதி பெறுவது முதல் ஆராய்ச்சிக்கான நிதி பெறுவது வரை மீண்டும் புதிதாக செய்ய வேண்டும்.