சென்னை: இளநிலை மற்றும் முதுநிலை இறுதி ஆண்டு மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் செப்டம்பர் 22 முதல் 29ஆம் தேதி வரை ஆன்லைனின் நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இறுதி ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் பருவத் தேர்வு - அண்ணா பல்கலைக்கழகம் - undefined
17:29 September 08
இறுதி ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் பருவத் தேர்வு - அண்ணா பல்கலைக்கழகம்
இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அண்ணா பல்கலைக்கழகத்தின் இறுதி பருவம் 2019 டிசம்பர் முதல் 2020 ஏப்ரல் வரை பயின்ற இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கான பருவத் தேர்வு செப்டம்பர் 22 முதல் 29ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் வீடுகளிலிருந்து தேர்வு எழுத லேப்டாப், கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன், டேப்லெட் ஆகியவை இருக்க வேண்டும். மேலும் இணையதள வசதி, கேமரா, மைக்ரோபோன் வசதிகள் இருக்க வேண்டும். மாணவர்களுக்கான விடைத்தாள்கள் பல பதிவுகளில் இருந்து ஒன்றை தேர்வு செய்து எழுதுவதாக அப்ஜெக்டிவ் டைப்பில் இருக்கும்.
இந்த தேர்வை மாணவர்கள் எழுத பயிற்சி பெறுவதற்கு வசதியாக ஏற்பாடு செய்யப்படும். ஆன்லைன் தேர்வுகளுக்கான விதிமுறைகள் பயிற்சி தேர்வுகள் தொடங்குவதற்கு முன்னர் வெளியிடப்படும். இறுதி பருவ மாணவர்களுக்கான தேர்வுகள் நடைபெறும் தேதி மற்றும் பிற விவரங்கள் விரைவில் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும். ஆன்லைன் மூலம் தேர்வு நடத்துவதற்கு உரிய அனுமதியை அதற்குரிய அதிகாரம் பெற்ற அமைப்பிடம் பெற்றுள்ளோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.