தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அரியர் மாணவர்களுக்கும் தேர்ச்சி மதிப்பெண் - அண்ணா பல்கலைக்கழகம் - அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: ஊரடங்கால் தள்ளிவைக்கப்பட்ட பருவத்தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி மதிப்பெண்கள் வழங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

university
university

By

Published : Aug 28, 2020, 9:43 AM IST

கரோனா அச்சத்தால், உயர்கல்வி மாணவர்களுக்கு இறுதித்தேர்வு தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் ரத்துசெய்யப்படுவதாகவும், அரியர் மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என்றும் முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி, படித்து முடித்து எத்தனை ஆண்டுகள் கடந்து இருந்தாலும், அரியர் வைத்திருந்து அத்தேர்வுக்கான கட்டணம் செலுத்தி இருந்தால், மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்படும்.

இதனையடுத்து, இறுதி பருவத்தேர்வு தவிர பிற பருவத்தேர்வுகள், அரியர் தேர்வுகள் எழுத பணம் செலுத்தியுள்ள மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்குவதற்கான விரிவான வழிகாட்டுதல் நெறிமுறைகள் அடங்கிய அரசாணையை கடந்த 26ஆம் தேதி அரசு வெளியிட்டது.

இந்நிலையில், இறுதி ஆண்டு தேர்வு தவிர ஏப்ரல், மே மாத பருவத் தேர்வெழுத விண்ணப்பித்து கட்டணம் செலுத்திய அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி மதிப்பெண்கள் வழங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அரியர் தேர்வு எழுத கட்டணம் செலுத்தியோருக்கும் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியர் மாணவர்களுக்கும் தேர்ச்சி மதிப்பெண் - அண்ணா பல்கலைக்கழகம்

அகமதிப்பீட்டு மதிப்பெண் அல்லது முந்தைய தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும், அகமதிப்பீட்டு மதிப்பெண் அல்லது முந்தைய தேர்வுகளில் தோல்வி அடைந்திருந்தால் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் வழங்கப்படும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: அரியர் வைத்துள்ள மாணவர்கள் தேர்ச்சி என அரசாணை வெளியீடு...!

ABOUT THE AUTHOR

...view details