தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அண்ணா பல்கலைக்கழகத்தில் வகுப்புகள் வரும் 8ஆம் தேதி முதல் தொடக்கம்! - anna university news

சென்னை: இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு 8ஆம் தேதி சுழற்சி முறையில் வகுப்புகள் தொடங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலை. வகுப்புகள் வரும் 8ஆம் தேதி முதல் தொடக்கம்!
அண்ணா பல்கலை. வகுப்புகள் வரும் 8ஆம் தேதி முதல் தொடக்கம்!

By

Published : Feb 4, 2021, 7:22 PM IST

இது குறித்து அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி, அனைத்து கல்லூரிகளின் முதல்வர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, கலை, அறிவியில், தொழில்நுட்ப, பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான (பட்டயப்படிப்பு உள்பட) அனைத்து வகுப்புகளும் வரும் 8ஆம் தேதி முதல் தொடங்க அனுமதித்துள்ளது.

மேலும் அந்த மாணவர்களுக்கு என விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது என அறிவித்துள்ளது. அதனடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், இளங்கலை, முதுகலை, கட்டிடக்கலை பொறியியல் படிப்புகளில் நேரடி வகுப்புகள் 8ஆம் தேதி முதல் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி தொடங்குவதற்கு அனுமதி அளித்துள்ளார்.

பி.இ., பி.டெக். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பிப்ரவரி 8ஆம் தேதி முதல் மார்ச் 10ஆன் தேதி வரையும், 2ஆம் ஆண்டு மாணவர்களுக்கு மார்ச் 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 2ஆம் தேதி வரையிலும், 3ஆம் ஆண்டு மாணவர்களுக்கு ஏப்ரல் 5ஆ தேதி முதல் 23ஆ தேதி வரையும் நேரடி வகுப்புகள் நடைபெறும்.

அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

எம்.இ., எம்.டெக்., எம்பிஏ, எம்சிஏ, எம்எஸ்சி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மார்ச் 8ஆம் தேதி முதல் ஏப்ரல்3ஆம் தேதி வரையில் வகுப்புகள் நடைபெறுகின்றன. இதேபோல் கட்டடக்கலைப் படிப்பான பிஆர்க், எம்ஆர்க் வகுப்புகளும் சுழற்சி முறையில் நடைபெறுகின்றன என அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க...சசிகலா வருகை திடீர் மாற்றம்!

ABOUT THE AUTHOR

...view details