’டான்செட்' எனப்படும் தமிழ்நாடு பொதுநுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள், அண்ணா பல்கலைக்கழகம், அதன் உறுப்புக்கல்லூரிகள், மண்டலக் கல்லூரிகள், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் சுயநிதி பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய முதுகலைப் பட்டப்படிப்புகளில் 2020-21ஆம் கல்வியாண்டில் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, எம்.பி.ஏ, எம்.சி.ஏ மற்றும் எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய பட்டப்படிப்பிற்கான நுழைவுத் தேர்வினை எழுத மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன்படி, எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளுக்கு கடந்த பிப்ரவரி 29 ஆம் தேதியும், எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் படிப்புகளுக்கு மார்ச் 1ஆம் தேதியும் டான்செட் நுழைவுத்தேர்வுகள் நடத்தப்பட்டன. இத்தேர்வினை சுமார் 30 ஆயிரம் பேர் எழுதினர்.