அண்ணா பல்கலைக்கழகத்தில் 280 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பணி நியமனங்கள் நடைபெற்றுள்ளதாகவும் அரசுக்கு புகார்கள் வந்தன. அதனடிப்படையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழுவை நியமனம் செய்து, கடந்த நவம்பர் 11 ஆம் தேதி உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா உத்தரவிட்டார்.
பின்னர், விசாரணை அதிகாரியான நீதிபதி கலையரசன், தனக்கு வந்த புகார்கள் குறித்த ஆவணங்களை சமர்ப்பிக்க, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தியை கேட்டுக்கொண்டார். ஆனால் அவர் ஆணையம் முன் ஆவணங்களை ஒப்படைக்காததால், பதிவாளர் கருணாமூர்த்திக்கு ஆவணங்களை ஒப்படைக்க சொல்லி விசாரணை அதிகாரி அழைப்பாணை அனுப்பினார்.