சென்னை:அண்ணா பல்கலைக்கழகத்தின் ட்ரோன் வடிவமைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல 10 கோடி நிதி ஒதுக்கப்பட்டு ஆளில்லா வான்வழி வாகன கழகத்தை தமிழ்நாடு அரசு தொடங்கி உள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் முதன்முறையாக உயர் கல்வித்துறையின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள ஆளில்லா வான்வழி வாகனக் கழகத்தினால், தமிழ்நாட்டில் வேலை வாய்ப்புகள் அதிகரித்து சிறு, குறுத் தொழில்களும் வளர்ச்சி அடையும்.
ட்ரோன்கள் உருவாக்கத்தில் அண்ணா பல்கலைக்கழகம்
மேலும், விவாசாயத்திலும் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தும் போது மனித சக்திகளின் எண்ணிக்கை குறைந்து, பயிர்களுக்கு முழுமையாக மருந்துகளை தெளிக்க முடியும்.
பேரிடர் போன்ற காலங்களில் விபத்துகளில் சிக்குபவர்களை மீட்கும் பணி எளிமையாகும்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளில்லா விமானங்களை இயக்கும் பயிற்சி ஆளில்லா விமானங்கள் எனப்படும் ட்ரோன்கள் உருவாக்கத்தில் அண்ணா பல்கலைக்கழகம் ஈடுபட்டு வருகின்றது. நாட்டிலேயே ட்ரோன் வடிவமைப்பில் முன்னணியில் அண்ணா பல்கலைக்கழகத்தின் விமான ஊர்தி துறை திகழ்ந்து வருகின்றன. இராணுவத்தில், அண்ணா பல்கலைகழக ட்ரோன்களை இடம்பெற செய்யும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அண்ணா பல்கலைக்கழகத்தின் ட்ரோன் வடிவமைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல ரூ. 10 கோடி நிதி ஒதுக்கப்பட்டு ஆளில்லா வான்வழி வாகன கழகத்தை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.
பல ரக ஆளில்லா விமானங்கள்
இதன் மூலம் சிறிய ரக கண்காணிப்பு ஆளில்லா விமானம், வேளாண் பணிகளுக்கான ஆளில்லா விமானம், இரவு நேர கண்காணிப்பு ஆளில்லா விமானம், தொலைதூர கண்காணிப்பு ஆளில்லா விமானம், தேடல் பணிகளில் ஆளில்லா விமானங்களின் , ஒரு திறல் அணிவகுப்பு, சுமைதூக்கும் ஆளில்லா விமானம், பேரிடர் மீட்புப் பணிகளுக்கான ஆளில்லா விமானம் உள்ளிட்ட விமானங்கள் மற்றும் வான்வழி கண்காணிப்பு எதிரிகளை தாக்கும் ஆளில்லா விமானம் ஆகியவை வடிவமைக்கப்பட்டுள்ளன.
மேலும், ஆளில்லா விமானங்ளை இயக்குவதற்கு பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. ஆளில்லா விமானம் குறித்த சரியான அறிதல் மற்றும் பயிற்சி இல்லாமல் இயக்கினால் விபத்துகள் ஏற்படும் என்பதால், 10ஆம் வகுப்பு முதல் பட்டம் பெற்றவர்கள் வரை பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன.
விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானங்களை இயக்குவதற்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஆளில்லா விமானம் இயக்குவதற்கு இந்தியாவில் அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலம் நிறுவப்பட்ட ஆளில்லா வான்வழி விமானக் கழகத்தின் மூலம் பயிற்சி அளித்து, சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க:தமிழ்நாடு படகுகளை ஏலம் விடும் இலங்கை: பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்