அண்ணா பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு வரும் 24 முதல் 29 ஆம் தேதி வரை ஆன்லைனில் நடக்க இருக்கிறது. ஒவ்வொரு தேர்வும் 1 மணி நேரம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள இத்தேர்வுகள், காலை 10 முதல் 11 மணி வரையும், நண்பகல் 12 முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 முதல் 3 மணி வரையும் மற்றும் மாலை 4 முதல் 5 மணி வரையும் 4 வேளைகளாக நடைபெற உள்ளது.
இத்தேர்வின் வினாத்தாளில் உள்ள 40 கேள்விகளில், 30 கேள்விகளுக்கு மட்டும் மாணவர்கள் பதிலளிக்கலாம் என்றும், பாடப்பிரிவுகளில் ஏதேனும் 4 தலைப்புகளை மாணவர்கள் பயின்றால் போதுமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வுக்கு பயன்படும் கேமரா, மைக், லேப்டாப் உள்ளிட்டவற்றை மாணவர்கள் தயாராக வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.