தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தேர்வின் போது சத்தம் வந்தால் மாணவர்கள் வெளியேற்றப்படுவர்! அண்ணா பல்கலைக்கழகம் - anna university exam alert

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வாயிலாக இணையவழித் தேர்வு நடைபெறுகிறது. இதன் மூலம் மாணவர்கள் தேர்வெழுதும் இடத்தில் தேவையற்ற சத்தம் எழுந்தால் மாணவர்களின் தேர்வு செல்லாது என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

anna university exam alert
anna university exam alert

By

Published : Sep 20, 2020, 2:28 PM IST

சென்னை:பொறியியல் இறுதியாண்டு பருவத் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளில், தேர்வு அறையில் தேவையற்ற சத்தம் வந்தால் மாணவர்கள் தேர்விலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என அண்ணா பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது.

இறுதியாண்டு மாணவர்களுக்கான பருவத் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதில் இணையவழித் தேர்வுக்கு மின்னனு சாதனங்களை ஏற்பாடுகளையும் மாணவர்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

இணையவழித் தேர்வின் வழிகாட்டுதல்கள்:

  • தேர்வு தொடங்குவதற்கு 10 நிமிடங்கள் முன்பே மாணவர்கள் கணினி முன்பு அமர வேண்டும்
  • ஒரு மணி நேரம் நடக்கும் தேர்வின்போது, மாணவர்கள் முகக்கவசம் அணிய கூடாது
  • தேர்வு எழுதும் மேசை மீது எந்த பொருள்களும் இருக்ககூடாது
  • தேர்வு அறையில் தேவையற்ற சத்தம் வந்தாலும் மாணவர்கள் தேர்விலிருந்து வெளியேற்றப்படுவார்கள்

மதிப்பெண் முறை

  • விடைகளை தேர்ந்தெடுத்து பதிலளிக்கக் கூடிய வகையில் வினாத்தாள் இருக்கும்
  • அதில் 40 கேள்விகள் இடம்பெறும்
  • அதில் 30 கேள்விகளுக்கு மாணவர்கள் பதிலளித்தால் போதுமானது
  • தேர்வு மதிப்பெண்கள் 100 மதிப்பெண்களுக்கு கணக்கிடப்படும்
  • எழுத்துத் தேர்வுக்கு 50 மதிப்பெண்களும், அகமதிப்பீட்டிற்கு 20 மதிப்பெண்களும், முந்தைய பருவத் தேர்விலிருந்து 30 மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்
  • ஒட்டுமொத்தமாக 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கும்.

ABOUT THE AUTHOR

...view details