தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

விடைத்தாள் முறைகேடு: 38 பணியாளர்கள் நீக்கம்; அண்ணா பல்கலை. அதிரடி! - விடைத்தாள் முறைகேடு

சென்னை: விடைத்தாள் முறைகேட்டில் ஈடுபட்டதாக 38 தற்காலிகப் பணியாளர்களை பணிநீக்கம் செய்து அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

anna

By

Published : Mar 20, 2019, 11:02 AM IST

Updated : Mar 20, 2019, 1:50 PM IST

அண்ணா பல்கலைக்கழகத்தில் சில மாதங்களுக்கு முன்பு விடைத்தாள் மறுமதிப்பீடு திட்டத்தில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இது தொடர்பாக, அப்போது தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த உமா உட்பட பலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், 38 தற்காலிக ஊழியர்களுக்கு இதில் தொடர்பு இருப்பது உறுதியானதாக தெரியவந்துள்ளது.

இதையடுத்து, அவர்கள் 38 பேரையும் பணிநீக்கம் செய்வதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இதில் நிரந்தர ஊழியர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Last Updated : Mar 20, 2019, 1:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details