தமிழ்நாட்டில் கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை காரணமாக கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் மார்ச் மாதம் 25ஆம் தேதி மூடப்பட்டன. இச்சூழலில், டிசம்பர் 2ஆம் தேதி முதுநிலை, ஆராய்ச்சி மாணவர்களுக்கான இறுதியாண்டு வகுப்புகள் தொடங்கப்பட்டன.
அண்ணா பல்கலைக் கழகத்தில் 700 மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை? - அண்ணாப் பல்கலைக் கழகத்தில் கொரோனா
15:24 December 14
சென்னை: அண்ணா பல்கலைக் கழகத்தில் கரோனா தொற்று பரவும் அபாயம் கண்டறியப்பட்டதால், இரண்டு மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதை தொடர்ந்து விடுதியில் உள்ள 700 மாணவர்களுக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள சென்னை மாநகராட்சிக்கு பல்கலைக்கழக நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
அதைத் தொடர்ந்து, டிசம்பர் 7ஆம் தேதி இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன. மாணவர்கள் தங்குவதற்கான விடுதிகளும் திறக்கப்பட்டன. இந்த நிலையில் அண்ணா பல்கலைக் கழகத்தின் கிண்டி வளாகத்தில் உள்ள விடுதியில் 700 மாணவர்கள் தனித்தனி அறைகளில் தங்கியிருந்தனர்.
அவர்களில் இரண்டு மாணவர்களுக்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததால், ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் மாணவர்கள் தனித்தனி அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல்கலைக் கழகத்தின் விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என மாநகராட்சிக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடியில் கடந்த 14 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை முடிவுகளில், 71 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.