அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டிற்கு இரண்டு பருவத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக மாணவர்களுக்கான வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டுவருகின்றன. இறுதி ஆண்டு மாணவர்களுக்குச் செய்முறை தேர்வுகள் உள்ளதால் கல்லூரிகளுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெற இருந்த தேர்வுகளை ஜனவரி 20ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பருவத் தேர்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக் கழக பருவத் தேர்வு அறிவிப்பு! - Anna University Semester Exam
சென்னை: நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறும் பருவத்தேர்வு வரும் ஜனவரி மாதம் நடைபெறும் எனப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
anna university
மேலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடைபெறும் எனவும், தேர்வினைக் கண்காணிக்க 20 மாணவர்களுக்கு ஒரு பேராசிரியர் நியமிக்கப்படுவார் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 5 ஆண்டுகளாக பாலியல் வன்புணர்வு: 70 வயது மூதாட்டி போன்று சிறுமியை ஆக்கிய கொடூரம்