சென்னை: பொறியியல் மற்றும் கலை அறிவியல் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தாமல் நேரடித் தேர்வாக நடத்தப்படும் என உயர் கல்வித்துறை அறிவித்தது. இதனை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை சந்தித்து மாணவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கல்லூரித் தேர்வுகளை ஆன்லைனில் நடத்தக்கோரி போராட்டம் நடத்திய மாணவர்களின் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுகிறது என்றும், மாணவர்களுக்கு இரு மாதம் கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.
மேலும், வேலைவாய்ப்புகள், மாணவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு, அனைத்து மாணவர்களுக்கும் ஜனவரி 20 ஆம் தேதிக்குப் பின் நேரடி முறையில் தேர்வு நடைபெறும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் பொறியியல் மாணவர்களுக்கும் நேரடியாகவே செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்திருந்தது.