தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பருவத்தேர்வு: புத்தகத்தைப் பார்த்து எழுத அண்ணா பல்கலை. அனுமதி! - புத்தகத்தைப் பார்த்து எழுத அண்ணா பல்கலை அனுமதி

சென்னை: மே மாதம் ஆன்லைனில் நடைபெறவுள்ள செமஸ்டர் (பருவம்) தேர்வின்போது மாணவர்கள் புத்தகத்தைப் பார்த்து தேர்வெழுத அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியுள்ளது.

பருவத்தேர்வு
பருவத்தேர்வு

By

Published : Apr 19, 2021, 8:44 AM IST

Updated : Apr 19, 2021, 9:11 AM IST

பொறியியல் மாணவர்களுக்கான பருவத்தேர்வு வருகின்ற மே மாதம் நடைபெற உள்ளது. கரோனா பாதிப்பு காரணமாக கடந்த முறை நடைபெற்ற பருவத்தேர்வுகளை பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மென்பொருளைக் கொண்டு இணையதளம் வழியே அண்ணா பல்கலைக்கழகம் நடத்தியது.

அண்ணா பல்கலைக்கழக கல்வி மன்றம் மாணவர்களுக்கான தேர்வினை நடத்துவதற்குப் புதிய வழிகாட்டுதல் வழங்கியிருக்கிறது. இது குறித்து சுற்றறிக்கை அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் வரும் மே மாதத்தில் இணையதளம் (ஆன்லைன்) வழியே நடைபெறவுள்ள பருவத்தேர்வின்போது மாணவர்கள் புத்தகத்தைப் பார்த்து தேர்வெழுத அனுமதிக்கப்பட்டுள்ளது.

கேள்விகள் நேரடியாகக் கேட்கப்படாமல் மாணவர்கள் கேள்விகளை நன்கு புரிந்துகொண்டு அதற்கேற்ப விடையளிக்கும் வகையில் வினாத்தாள் தயாரிக்கப்பட உள்ளது.

அதன்படி விடை எழுதும்போது ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் மாணவர்கள் புத்தகத்தைப் பார்த்து அறிந்து விடை அளிக்கலாம்.

Last Updated : Apr 19, 2021, 9:11 AM IST

ABOUT THE AUTHOR

...view details