சென்னை: அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர், உதவி நூலகர், பேராசிரியர் உள்ளிட்ட 312 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் துறை இளங்கலை, முதுகலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். உதவி பேராசிரியர், நூலகர் ஆகிய பணிகளில் காலியாக உள்ள 312 இடங்களை நிரப்புவதற்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
பிஇ, பி.டெக், எம்இ, எம்.டெக், முனைவர் பட்டம் பெற்றிருப்பதுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும், விண்ணப்பதாரர் 24 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 7-ஆவது சம்பளக்குழுவின் அறிவிப்பின்படி சம்பளம் வழங்கப்படும்.