தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தெலுங்கு படத்தில் நடிகையாக நடிக்கிறாரா டிடி? - Akashpuri and DD

தமிழ் சின்னத்திரையில் தனியார் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக வலம்வருபவர் திவ்யதர்ஷினி. தற்போது பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தும்வரும் இவர், தெலுங்கில் பிரபல இயக்குநர் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

Tv Anchor DD

By

Published : Mar 25, 2019, 11:10 AM IST

Updated : Mar 25, 2019, 11:57 AM IST

தமிழ் சின்னத்திரையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் முன்னணி தொகுப்பாளினியாக பல வருடங்களாக வலம்வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் சிறுவயதிலேயே சின்னத்திரையில் அறிமுகமானவர். இவரின் சுறுசுறுப்பும், நகைச்சுவை கலந்த சிரிப்பும் பார்ப்பவர் அனைவரையும் வெகுவாகக் கவரும். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

சின்னத்திரையில் பல வருடங்களாக பணியாற்றிவரும் இவர் அவ்வப்போது திரைப்படங்களிலும் நடித்துவருகிறார். 2014ஆம் ஆண்டு தனது நண்பரை திருமணம் செய்துகொண்ட இவர், பின்பு ஏற்பட்ட கருத்து வுறுபாட்டால்விவாகரத்துப் பெற்றுக்கொண்டார்.

இதையடுத்து டிடி சின்னத்திரையிலும், வெள்ளத்திரையிலும் பணியாற்றிவருகிறார். தற்போது 'சர்வம் தாளமயம்' உள்பட அடுத்தடுத்தப் படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார்.

இந்நிலையில், தெலுங்கில்பிரபல முன்னணி இயக்குநர் பூரி ஜெகநாத் இயக்கும் ஒரு படத்தில் அறிமுகமாகியுள்ளார். அதில் கதாநாயகனாக ஆகாஷ் நடிக்கிறார்.

இந்தப் படத்தின் கதாநாயகி இவர்தானாஎன்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், அவரது ட்வீட்டில் 'மை ஸ்வீட் ஹீரோ' எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால் டிடி கதாநாயகியாக நடிக்கிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அப்படி நடித்தால் தன்னைவிட 13 வயது சிறிய நடிகருக்கு ஜோடியாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Akashpuri and DD
Last Updated : Mar 25, 2019, 11:57 AM IST

ABOUT THE AUTHOR

...view details