சென்னை: தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. இந்நிலையில் சென்னை அசோக் நகரில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்.
9ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை - அமைச்சர் அன்பில் மகேஷ் - தளர்வில்லாத 11 மாவட்டங்களில் தற்போதைக்கு மாணவர் சேர்க்கை இல்லை
மாணவர்களின் பெற்றோர்கள் எங்களுக்கு அளித்துள்ள மனு, அனுப்பியுள்ள மெயில் உள்ளிட்டவற்றில் 9ஆம் வகுப்பில் தங்கள் குழந்தைகள் நல்ல மதிப்பெண் பெற்றிருப்பதாக தெரிவிக்கின்றனர். எனவே 9ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் 11ஆம் வகுப்பு பிரிவுகள் ஒதுக்கப்படும் என தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. கரோனா காலத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் மாணவர்களும் பெற்றோர்களும் கண்டிப்பாக விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். தளர்வில்லாத 11 மாவட்டங்களில் தற்போதைக்கு மாணவர் சேர்க்கை இல்லை என தெரிவித்தார்.
11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் எந்த அடிப்படையில் மாணவர்களுக்கு பிரிவுகள் வழங்கப்படுகின்றன என்ற செய்தியாளரின் கேள்விக்கு, மாணவர்களின் பெற்றோர்கள் எங்களுக்கு அளித்துள்ள மனு, அனுப்பியுள்ள மெயில் உள்ளிட்டவற்றில் 9ஆம் வகுப்பில் தங்கள் குழந்தைகள் நல்ல மதிப்பெண் பெற்றிருப்பதாக தெரிவிக்கின்றனர். எனவே 9ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் 11ஆம் வகுப்பு பிரிவுகள் ஒதுக்கப்படும் என தெரிவித்தார்.
TAGGED:
அன்பில் மகேஷ் பொய்யாமொழி