சென்னை: இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் யானை. இந்த திரைப்படம் ஜூலை 1 ஆம் தேதி திரையங்குகளில் வெளியாகியது. பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆக்சன், சென்டிமென்ட், காதல் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் கொண்டிருந்தது. இது தவிர, அருண் விஜயின் நடிப்பு, ஜி.வி. பிரகாஷ் குமாரின் மயக்கும் இசை படத்திற்கு கூடுதல் பலமாக இருந்தது.
ஆக.19 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது. குறுகிய காலத்தில் சாதனையைப் படைத்துள்ளது. இதுகுறித்து ஜீ5 ஓடிடி தளம் தரப்பில் “ஜீ5 இல், எங்கள் பார்வையாளர்கள் ரசிக்கும்படி அவர்களுக்கு விருப்பமான மொழியில் பிரபலமான படைப்புகளை வழங்குவதே எங்கள் நோக்கம்.
சிறந்த படைப்புகளை வழங்க வேண்டுமென்பதில் நாங்கள் முழுக்கவனத்தை செலுத்துகிறோம். யானை ஒரு தனித்துவமான கமர்ஷியல் படம். குறுகிய காலத்திற்குள் இத்திரைப்படத்திற்கு கிடைத்திருக்கும் மிகப்பெரும் வரவேற்பு, எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி தந்துள்ளது. இந்த வெற்றி எங்கள் பார்வையாளர்களுக்கு நல்ல தரமான பொழுதுபோக்கை தொடர்ந்து வழங்க எங்களை ஊக்குவித்துள்ளது.