சென்னை: வடகிழக்குப் பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைக்கால நோய்களில் இருந்து பொதுமக்களை காக்கும் வகையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகளின் சார்பில்,
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்டப் பகுதிகளில் கூடுதலாக 200 சிறப்பு மருத்துவ முகாம்கள் தொடங்கி வைக்கப்பட்டன.
இதன் தொடக்க நிகழ்வாக சென்னை, தேனாம்பேட்டை ஆஸ்டின் நகரில் சிறப்பு மருத்துவ முகாமினை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.