சென்னை:தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழ்நாடு அரசு, நிவாரண உதவிகள் வழங்குதல், முகாம்கள் அமைத்தல், வெள்ள தடுப்பு பணிகள் உள்ளிட்டவை கண்காணிக்க, 12 மாவட்டங்களுக்கு ஐபிஎஸ் அலுவலர்களை நியமனம் செய்துள்ளது. இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு கூடுதலாக நான்கு ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு பருவமழை: சிறப்பு அலுவலராக அமுதா ஐஏஎஸ் நியமனம் - chengalpattu news
வடகிழக்கு பருவமழை நிவாரண கண்காணிப்பு பணிகளுக்கு சிறப்பு அலுவலராக அமுதா ஐஏஎஸ் உள்பட 4 பேர் ஐஏஎஸ் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
![வடகிழக்கு பருவமழை: சிறப்பு அலுவலராக அமுதா ஐஏஎஸ் நியமனம் அமுதா ஐஏஎஸ் நியமனம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-13578898-thumbnail-3x2-amutha.jpg)
அமுதா ஐஏஎஸ் நியமனம்
சிறப்பு அலுவலர்கள்
- தாம்பரம், சோழிங்கநல்லூர், செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளை கண்காணிக்க ஊரக வளர்ச்சி துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் நியமனம்.
- தென் சென்னைக்கு போக்குவரத்துதுறை முதன்மை செயலாளர் கோபால் ஐஏஎஸ் நியமனம்.
- வட சென்னை பகுதிக்கு உயர்கல்வி துறை செயலாளர் கார்த்திகேயன் ஐஏஎஸ் நியமனம்.
- மத்திய சென்னை பகுதிக்கு டிட்கோ இயக்குனர் பங்கஜ் குமார் பன்சால் நியமனம்.
இதையும் படிங்க:கோயில்களின் பாதுகாவலர்கள் நியமனத்தை அந்நிர்வாகங்கள் தான் முடிவெடுக்க வேண்டும் - உயர் நீதிமன்றம்