அமமுக கட்சியின் வர்த்தக அணி மாநில செயலாளராக இருந்தவர் எம். சௌந்தரபாண்டியன். இவர் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் அமமுக சார்பாக போட்டியிட்டார்.
அமமுகவிலிருந்து விலகும் கட்சியின் முக்கிய உறுப்பினர் - ammk candidate relieves from the party
அமமுகவின் வர்த்தக அணி மாநில செயலாளராக இருந்த எம். சௌந்தரபாண்டியன் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
ammk soundarapandian relieves from the party
தற்போது இவர், தான் வகித்துவந்த வர்த்தக அணி மாநில செயலாளர் பதவி, அமமுக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனிடம் விலகல் கடிதம் கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த எம். சௌந்தரபாண்டியன் கூறுகையில், "பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளன்று இந்திய நாடார்கள் பேரமைப்பு என்ற புதிய அமைப்பை தொடங்குவதால் இந்த முடிவை எடுத்துள்ளேன். எனக்கு இதுவரை பொறுப்புகள் வழங்கியதற்கு டிடிவி தினகரனுக்கு நன்றி" எனக் கூறினார்.
TAGGED:
எம் சௌந்தரபாண்டியன்