சென்னை: ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது உரையாற்றிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அம்மா உணவகப் பணியாட்கள் குறைக்கப்பட்டுள்ளனர். மேலும் உணவகத்திற்கு வழங்கப்படும் பொருள்களும் குறைவாக உள்ளது எனக் குற்றச்சாட்டு எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு, அம்மா உணவகம் செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியில் உள்ளனர். இந்த மழை நேரத்தில்கூட இலவச உணவு அம்மா உணவகங்கள் மூலம் அளிக்கப்பட்டது என்றார்.
உடனே குறுக்கிட்டுப் பேசிய அவை முன்னவர் துரைமுருகன், "அம்மா உணவகத்தை மூடினால் என்ன? கலைஞர் பெயர் உள்ள எத்தனை திட்டங்களை மூடியுள்ளீர்கள் நீங்கள்" என்றார். இதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, அம்மா உணவகத்தை மூடினால் அனுபவிப்பீர்கள் என்றார்.