தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தொடர் மழை - அம்மா உணவகத்தில் இலவச உணவு - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மழை முடிவும் வரை அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அம்மா உணவகத்தில் உணவுகளை ஆய்வு மேற்கொண்ட

By

Published : Nov 9, 2021, 4:10 PM IST

Updated : Nov 9, 2021, 7:38 PM IST

சென்னை: ஆழ்வார்பேட்டை இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், கடந்த 5 ஆண்டு அதிமுக ஆட்சியில் எந்தவிதமான பணிகளும் நடைபெறவில்லை என உயர்நீதிமன்றமே கண்டித்து உள்ளதாக தெரிவித்தார். திமுக ஆட்சிக்கு வந்து 771 கி.மீ மழைநீர் கால்வாய்கள் மற்றும் ஆறுகளில் தூர்வாரப்பட்டு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முறைகேடு - விசாரணை ஆணையம்

மழைநீர் தேங்கிய இடங்களில், 560 மோட்டார் பம்புகள் மூலம் மழைநீரை வெளியேற்றி வருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். மழை முடியும் வரை, "அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்கப்படும்" என்றும் அவர் தெரிவித்தார்.

மாநகராட்சி சமையல் கூடங்களில் தயிர்சாதம், சாம்பார் சாதம், சப்பாத்தி தயாரித்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

மழைநீர் வடிகால் தூர்வாரியதில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து நிச்சயம் ஆணையம் அமைத்து விசாரணை நடத்தப்படும் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: ரெட், ஆரஞ்ச், மஞ்சள் அலர்ட் என்றால் என்ன?

Last Updated : Nov 9, 2021, 7:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details