சென்னை:அம்பத்தூர்- வானகரம் சாலையில் சிறிய, பெரிய நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் இங்குள்ள ஒரு கம்பெனிக்கு திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையைச் சேர்ந்த ஓட்டுநர் முருகன் (52) என்பவர் லாரியில் மூலப்பொருள்களை ஏற்றி கொண்டு வந்தார்.
பின்னர், அவர் அங்குள்ள கம்பெனியில் பொருள்களை இறங்கி விட்டு, லாரியை சாலை ஓரமாக நிறுத்திவிட்டுத் தூங்கியுள்ளார். நள்ளிரவு 1மணியளவில் லாரியில் முன் பகுதியில் திடீரென கறும்புகை வெளியேறியது. இதனையடுத்து லாரியில் தீ மளமளவெனப் பற்றி எரிந்தது.
சத்தம் கேட்டு அருகில் படுத்துத் தூங்கிய ஓட்டுநர் முருகன் எழுந்து ஓடி வந்தார். பின்னர் அவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தார். தகவலறிந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
மேலும் அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு அதிகாரி ஜெயச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.