சென்னை: சிம்பு-கௌதம் மேனன் கூட்டணி என்றாலே பெரிய எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது. விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை அடுத்து இவர்களது கூட்டணியில் தயாராகி இருக்கும் படம் ”வெந்து தணிந்தது காடு”.
இதன் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. அதேபோல படத்தின் வியாபாரமும் தீவிரமடைந்துள்ளது. இந்த படத்திற்கான இந்தி மொழி உரிமம் ரூ.12 கோடிக்கும், இணையதள வெளியீட்டு உரிமத்தை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ.25 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.