நெம்மேலியில் 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில், தானியங்கி வடிகட்டி அலகுகள் பொருத்தும் பணிகள், நேற்று முதல் ஏப்ரல் 1 ஆம் தேதி வரை நடைபெற இருப்பதால், சென்னைப் பகுதியில் குடிநீர் வழங்குவதில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், மாற்று ஏற்பாடாக பராமரிப்புக் காலத்தில் திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, அடையார், வேளச்சேரி, பெசன்ட் நகர், மயிலாப்பூர், மந்தைவெளி, சோழிங்கநல்லூர், ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை ஆகியப் பகுதிகளுக்கு நேற்று முதல் செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து வழக்கமாக வழங்கப்படும் குடிநீரின் அளவு குறையாமல் குழாய்கள் மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது.
வீராணம், செம்பரம்பாக்கத்திலிருந்து குடிநீர் விநியோகம் - சென்னை குடிநீர் வாரியம் - குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
சென்னை: நெம்மேலி கடல் நீர் சுத்திகரிப்பு ஆலை பராமரிப்புப் பணியினை முன்னிட்டு மாற்று ஏற்பாடாக வீராணம் மற்றும் செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து தண்ணீர் வழங்கப்படும் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
board
எனவே மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும், நெம்மேலியில் பராமரிப்புப் பணிகள் முடியும் வரை இந்த மாற்று ஏற்பாடுகள் தொடரும் எனவும் சென்னை குடிநீர் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: விமான நிலையத்தில் கரோனா வைரஸ் விழிப்புணர்வு