மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச்சட்டம் ஒற்றுமையாக வாழும் நாட்டு மக்களிடையே, பிரிவினையை ஏற்படுத்துவதாகக் கூறி பல்வேறு மாநிலங்களிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் இசுலாமிய அமைப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
சாதி மதத்தால் மக்களைப் பிரிக்கும் பாஜக - அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் - பாஜக
சென்னை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து ஆவடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதேபோல், ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகே தி.மு.க, காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் மற்றும் இசுலாமிய அமைப்பினர் என பலர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், மத்திய அரசையும், பாஜகவையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திருவள்ளூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார், ” பா.ஜ.க.வினர் கொண்டு வரும் அனைத்துத் திட்டங்களும் மக்களுக்கு எதிராகவே இருக்கிறது. சாதி, மதத்தைக் காட்டி மக்களைப் பிரிக்க முயற்சிக்கும் பா.ஜ.க.வின் எண்ணம் நிறைவேறாது “ என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டிற்கும் வேண்டும் என்.ஆர்.சி.! - பெ.மணியரசன்