தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தாம்பரம் போக்குவரத்து பணிமனையில் முன்கள பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி! - Health department

சென்னை: தாம்பரம் போக்குவரத்து பணிமனையில், புறநகர் பேருந்துகளை இயக்கும் 200க்கும் மேற்பட்ட ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட போக்குவரத்து துறையினர்
கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட போக்குவரத்து துறையினர்

By

Published : Apr 15, 2021, 3:53 PM IST

நாடு முழுவதும் இரண்டாம் அலை கரோனா தீவிரமாக பரவிவரும் நிலையில், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் மிக வேகமாக அதிகரித்து வருகிறது.

இதனையடுத்து, சுகாதாரத் துறை அறிவுறுத்தலின்படி, தாம்பரம் நகராட்சியில் முன்கள பணியாளர்களாக உள்ள போக்குவரத்து துறையினர் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போட தாம்பரம் போக்குவரத்து பணிமனையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட போக்குவரத்து துறையினர்

இதில் ஓட்டுநர், நடத்துநர், பல்வேறு போக்குவரத்து பணியாளர்கள் என 200 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

மேலும், அவர்களை முறையாக கண்காணித்த மருத்துவக் குழுவினர் அடுத்தக்கட்ட தடுப்பூசி போட்டுக்கொள்ளும் தேதிகளை குறிப்பிட்டு வழங்கினார்கள்.

இதனால், நேரடியாக பொதுமக்களிடம் தொடர்புடைய நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவதால், கரோனா தொற்று பரவல் தடுக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 'தடுப்பூசி சப்ளையில் மக்களின் உயிரோடு விபரீத விளையாட்டு'

ABOUT THE AUTHOR

...view details