நடப்பாண்டில் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சென்னையை சேர்ந்த உதித் சூர்யா என்ற மாணவர் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்து ஏற்கனவே தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் நான்கு பேராசிரியர்களை கொண்ட குழுவினை அமைத்து விசாரணை நடத்தினார்.
இதில் நீட் தேர்வினை மும்பையில் உதய் சூர்யாவிற்கு பதில் வேறு ஒரு மாணவர் தனது புகைப்படத்தை ஒட்டி எழுதியுள்ளார். மேலும் உதய் சூர்யாவின் தந்தை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவராகப் பணியாற்றி வரும் வெங்கடேசன் ஆவார். அவரும், மும்பையில் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதிய மாணவரும் மருத்துவ கலந்தாய்வில் கலந்துகொண்டு தேனி மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்து உதய் சூர்யா என்ற பெயரில் மும்பை மாணவர் சேர்ந்துள்ளார்.
இந்நிலையில் மருத்துவ கல்விக்கான வகுப்புகள் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தொடங்கிய போது, உதய்சூர்யா மருத்துவ கல்லூரிக்கு சென்று 45 நாட்கள் படித்துள்ளார். அப்பொழுது அந்த மாணவர் அளித்த புகைப்படங்கள் இரண்டும் வெவ்வேறாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாணவர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையிலேயே இந்த உண்மை வெளியில் வந்துள்ளது.
மேலும் இதில் ஒரு அதிர்ச்சித் தகவலாக ஆள்மாறாட்டம் செய்து இன்னும் சில பேர் நீட் தேர்வினை எழுதி மருத்துவ கல்லூரியில் சேர்ந்து இருக்கலாம் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயண பாபு கூறுகையில், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், துணை முதல்வர் உடற்கூறியல் துறைத்தலைவர், உடலியியல், உயிர்வேதியியல், நிர்வாக அதிகாரி, உதவி நிர்வாக அதிகாரி மருத்துவக்கல்லூரி உள்ளிட்டோர் தலைமையில் சிறப்பு குழுவினை அமைத்து, 2019-20 ஆம் ஆண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்த மாணவர்களின் நீட் தேர்வு ஹால் டிக்கெட், மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை குழுவினரின் ஒதுக்கீட்டு ஆணை, 10, 12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றை சோதனை செய்து சரியான மாணவர்தான் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்துள்ளாரா என்பதை சரிபார்த்த தகவலை மருத்துவக்கல்வி இயக்குனரகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.
மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு செய்தியாளர் சந்திப்பு மேலும், மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்கள் ஒருவரின் அனுமதி கடிதத்தைக்கூட சரிபார்க்காமல் விடக்கூடாது. விடுமுறையில் சென்றிருந்தாலும் அவர் மீண்டும் சேர்ந்த பின்னர் அவரின் சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும் என கூறியுனார்.
தேனி மருத்துவ கல்லூரியில் ஆள்மாறாட்டம் செய்த சேர்ந்த உதய்சூர்யாவை பிடிப்பதற்கு காவல்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தற்போது உதய்சூர்யா படிப்பில் தான் தொடரவில்லை என மருத்துவ கல்வி இயக்குனருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஆள்மாறட்டம் செய்து படித்த உதய் சூர்யா கடிதம்