தமிழ்நாடு

tamil nadu

தீபாவளி அன்று வரும் மகாவீர் நிர்வான் நாள்: சென்னையில் இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு!

By

Published : Oct 30, 2021, 3:55 PM IST

நவம்பர் 4ஆம் தேதி தீபாவளியுடன் சேர்த்து மகாவீர் நிர்வான் நாளும் வரும் நிலையில், சென்னையில் உள்ள அனைத்து விதமான இறைச்சி கடைகளும் செயல்பட மாநகராட்சி தடை விதித்துள்ளது.

ஆண்டும்
மகா நிர்வான்

சென்னை:ஒவ்வொரு ஆண்டும் மகாவீர் நிர்வான் நாள் (மகாவீரர் இறந்த நாள்) இந்தியாவில் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினம் இந்தியாவில் இறைச்சிக் கடைகளும் மதுக்கடைகளும் மூட மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன.

தீபாவளி - மகாவீர் நிர்வான் நாள்

இந்நிலையில் மகாவீரர் நிர்வான் நாளை முன்னிட்டு நவம்பர் 4ஆம் தேதி சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும் இயங்க மாநகராட்சி தடை விதித்துள்ளது. அதுமட்டுமின்றி பல்பொருள் அங்காடிகளிலும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், வரும் நவம்பர் 4ஆம் தேதி, சென்னையில் உள்ள அனைத்து மண்டல அலுவலர்களும் இறைச்சிக் கடைகள், இறைச்சிக் கூடங்கள் அடைக்கப்பட்டுள்ளதா என்பதைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் எனவும், அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும், தடையை மீறி இறைச்சி விற்பனை செய்யும் கடைகள் மீதும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

மக்கள் அதிருப்தி

4ஆம் தேதி தீபாவளி பண்டிகையும் கொண்டாடப்படவுள்ள நிலையில், இறைச்சிக் கடைகளுக்கான தடை உத்தரவு அசைவ பிரியர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தீபாவளிப் பண்டிகை நாளன்று இறைச்சி விற்பனை தடை உத்தரவை திரும்பப் பெறுவது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு முடிவெடுக்கப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:’சமூக நீதி காத்த அறநிலையத்துறை அமைச்சர்’ - அதிமுக செய்தித்தொடர்பாளர் வைகைச் செல்வன் பாராட்டு

ABOUT THE AUTHOR

...view details