சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எழுவர் விடுதலை குறித்து ஆளுநருக்கு ரவிச்சந்திரன் எழுதிய கடிதம் குறித்த கேள்விக்கு, "இது 28 ஆண்டு கால அரசியல், சட்ட, உணர்வு ரீதியான கண்ணீரும் கவலையும் தோய்ந்த ஒரு போராட்டம். நீதிமன்றம், மாநில அரசு நினைத்தால் விடுதலை செய்து கொள்ளலாம் எனக் கூறிய பின்பும்கூட தீர்மானம் போடப்பட்டு ஆளுநரின் ஒரே ஒரு ஒப்புதலுக்குக் காத்துக்கொண்டிருக்கிறது.
ராஜிவ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் உள்ள ஏழு தமிழர்களும் குற்றமற்றவர்கள் என்று அனைவருக்கும் தெரியும். இக்கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் இப்போது உயிரோடு இல்லை. தற்போது சிறையிலுள்ள இந்த ஏழு பேரும் சம்பந்தமில்லாத அப்பாவிகள்.