சென்னை பல்கலைக்கழகத்தின் குற்றவியல் துறை மற்றும் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைக் குற்றங்கள் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.
கருத்தரங்கிற்குப் பின்னர் நமது ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பேசிய ஜனநாயக மாதர் சங்கத் துணைத் தலைவர் வாசுகி, ”ஆண்டுதோறும் தேசிய அளவில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் வன்முறைக் குற்றங்கள் அதிகரித்துவருகின்றன. தமிழ்நாட்டிலும் அதிகளவில் பெண்களுக்கெதிரான குற்றங்கள் நடக்கின்றன. எனவே, இது குறித்து விவாதிக்க அரசு சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை என்கவுன்டர் செய்வது சரியான தீர்வாக அமையாது. பாலியல் வன்கொடுமை எனக் கூறி அரசியல் எதிரிகளையும் சமூக செயற்பாட்டாளர்களையும் அதிகாரவர்க்கம் என்கவுன்டர் செய்ய வாய்ப்புள்ளது. தவறு செய்தவர்களுக்கு காவல் துறை தண்டனை வழங்க முடியாது. நீதிமன்றத்தின் மூலம் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.