தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காரைக்காலில் அனைத்து வகுப்பு பள்ளிகளும் திறப்பு! - All class schools open in

புதுச்சேரி: ஒன்பது மாதங்களுக்கு பிறகு காரைக்காலில்அனைத்து வகுப்பு பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன.

காரைக்காலில் அனைத்து வகுப்பு பள்ளிகளும் திறப்பு  பள்ளிகள் திறப்பு  புதுச்சேரி பள்ளிகள் திறப்பு  All class schools open in Karaikal  All class schools open in  All class schools open in pudhucherry
All class schools open in pudhucherry

By

Published : Jan 4, 2021, 2:21 PM IST

உலகை அச்சுறுத்தும் கரோனா தொற்று பரவல் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் கடந்த மார்ச் 17 ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன.

இதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 5 ஆம் தேதி பெற்றோர்கள் கருத்து கேட்பு நடத்தப்பட்டு, விருப்பமுள்ள மாணவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை சிறப்பு வகுப்பு நடைபெற்று வந்தது.

பள்ளிகள் திறப்பு
இந்நிலையில், புதுச்சேரியில் மாநிலம் முழுவதும் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 101 அரசுப்பள்ளிகளும், உதவிபெறும் 7 பள்ளிகள், தனியார் பள்ளிகள் 63 என மொத்தம் 171 பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டுள்ளது.

வகுப்பு நேரம்

காரைக்காலில் 40 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இன்று முதல் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மட்டுமே வகுப்புகள் நடைபெறுகின்றன.

மாணவர்கள் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, கைகளை சுத்தம் செய்த பிறகு வகுப்பறையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

திறக்கப்பட்டுள்ள பள்ளிகள்

பேருந்து கட்டணம்

இது குறித்து மாணவர்கள் கூறுகையில், " 9 மாதத்திற்கு பிறகு பள்ளிக்கு வருவதால் நண்பர்களையும், ஆசிரியர்களையும் கண்டு மகிழ்கிறோம். பள்ளிகள் திறந்தும் மாணவர்களுக்கான சிறப்பு பேருந்து இயக்கப்படவில்லை.

இதனால், தனியார் கட்டப் பேருந்தில் ஒரு நாளைக்கு 10 முதல் 20 ரூபாய் செலவு செய்து பள்ளிக்கு வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது" என்றனர்.

இதையும் படிங்க:'அரசுப் பள்ளிகளை தத்தெடுக்க முன் வாருங்கள்..!' - செங்கோட்டையன் அழைப்பு

ABOUT THE AUTHOR

...view details