சென்னை அசோக்நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனை, அவரது இல்லத்தில் வி.கே.சசிகலா சந்தித்து நலம் விசாரித்தார்.
சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த வி.கே.சசிகலா, "அதிமுகவில் உள்ள அனைவரும் எனக்கு வேண்டியவர்களே. அனைவரும் ஒற்றுமையாக இணைந்து செயல்பட வேண்டும். கட்சியின் மூத்த உறுப்பினர் என்ற முறையில் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்தேன். தற்போது சூழ்நிலைகள் அனைத்தும் காலப்போக்கில் சரியாகிவிடும். எம்ஜிஆர், ஜெயலலிதா காட்டியில் வழியில் தான் நான் நடப்பேன். நாடாளுமன்ற தேர்தலுக்குள் அதிமுகவினர் நிச்சயம் ஒன்றிணைவார்கள்.
பண்ருட்டி ராமச்சந்திரன் வி.கே.சசிகலா சந்திப்பு எங்களுடைய தொண்டர்கள் மற்றும் தமிழ்நாடு மக்களின் எண்ணங்கள் படியே என்னுடைய செயல்பாடுகள் இருக்கும். சுற்றுப் பயணங்களில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் வரவேற்பு நன்றாக இருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். பண்ருட்டி ராமசந்திரன் அவர்கள் நீங்கள் ஒருசில செயல்களை செய்ய வேண்டும் என்றார். நான் கண்டிப்பாக செய்கிறேன் என்று கூறினேன்" என தெரிவித்தார்.
பண்ருட்டி ராமச்சந்திரன் வி.கே.சசிகலா சந்திப்பு இதையும் படிங்க:'திருமணமாகி 4 மாதங்களில் மகளைக் காணவில்லை' - நீதிமன்றத்தில் பெற்றோர் ஆட்கொணர்வு மனு தாக்கல்