தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வாக்கு செலுத்தினார் நடிகர் அஜித் - 16th Legislative Assembly Election

நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்கினை பதிவு செய்தார்.

20 நிமிடங்களுக்கு முன்னதாகவே வாக்குச் சாவடி மையம் வந்த 'தல' அஜித்
20 நிமிடங்களுக்கு முன்னதாகவே வாக்குச் சாவடி மையம் வந்த 'தல' அஜித்

By

Published : Apr 6, 2021, 7:19 AM IST

Updated : Apr 6, 2021, 7:39 AM IST

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க தொடங்கியிருக்கின்றனர். சென்னை, வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அஜித்தும், அவரது மனைவி ஷாலினியும் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.

நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வாக்குப்பதிவு

ஜனநாயக கடமையாற்ற இருவரும் 20 நிமிடங்களுக்கு முன்னதாகவே வாக்குச்சாவடி மையத்திற்கு வருகை தந்தனர். இந்த தகவலறிந்து நடிகர் அஜித்தின் ரசிகர்கள் வாக்குச்சாவடி மையத்திற்கு விரைந்து அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

Last Updated : Apr 6, 2021, 7:39 AM IST

ABOUT THE AUTHOR

...view details