தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பிஎஸ்என்எல் இணைப்பு பெட்டி சேதம்: செல்போன் நிறுவன பொறியாளர் கைது - பி.எஸ்.என்.எல் இணைப்பு பெட்டி

சென்னை: பிஎஸ்என்எல் இணைப்பு பெட்டியை சேதப்படுத்திய ஏர்டெல் செல்போன் நிறுவன பொறியாளர் கைது செய்யப்பட்டார்.

பி.எஸ்.என்.எல் இணைப்பு பெட்டியை சேதப்படுத்திய ஏர்டெல் செல்போன் நிறுவன இன்ஜினியர் கைது
பி.எஸ்.என்.எல் இணைப்பு பெட்டியை சேதப்படுத்திய ஏர்டெல் செல்போன் நிறுவன இன்ஜினியர் கைது

By

Published : Mar 7, 2021, 3:14 PM IST

அம்பத்தூரை அடுத்த கொரட்டூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் சமீபகாலமாக பிஎஸ்என்எல் தொலைபேசி மற்றும் இணையதள சேவை சரிவர செயல்படாமல் இருந்து வந்துள்ளது. இது குறித்து வாடிக்கையாளர்கள் அடிக்கடி கொரட்டூர், வீட்டு வசதி வாரியத்தில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு சென்று புகார் செய்துள்ளனர்.

அப்போது, அலுவலர்கள் வாடிக்கையாளர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், இன்று கொரட்டூர், சென்ட்ரல் அவின்யூ, தனியார் கல்லூரி அருகே பிஎஸ்என்எல் இணைப்பு பெட்டியை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திறந்து பணியாற்றி கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக பிஎஸ்என்எல் டெக்னீசியன் அப்பன்ராஜ் என்பவர் அந்த நபர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என இணைப்பு பெட்டி அருகில் சென்று பார்த்த போது அவர், இணைப்பு பெட்டியிலிருந்த வயர்களை சேதப்படுத்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து அப்பன்ராஜ் பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு தகவல் கொடுத்ததையடுத்து உதவி பொறியாளர் நானி தலைமையில் ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பின்னர் அனைவரும் சேர்ந்து இணைப்பு பெட்டியை சேதப்படுத்திய நபரை பிடித்து கொரட்டூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

காவல் ஆய்வாளர் பொற்கொடி தலைமையில் காவலர்கள் தீவிர விசாரணை நடத்தியதில், அவர் அயனாவரம், பாரதமாதா தெருவை சேர்ந்த ஜெயபிரகாஷ் (40) என்பதும், ஏர்டெல் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. மேலும் அவர் பிஎஸ்என்எல் இணைப்பு பெட்டியிலிருந்து வயர்களை துண்டித்து வாடிக்கையாளர்களின் தொலைபேசி, இணையதள சேவையை தடுத்து நிறுத்தி உள்ளார்.

மேலும், வாடிக்கையாளர்களை பிஎஸ்என்எல் நிறுவனத்திலிருந்து தனியார் நிறுவனத்திற்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வந்து உள்ளார். இதில், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பல அலுவலர்கள், ஊழியர்கள் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஜெயபிரகாஷை கைது செய்துள்ளனர். மேலும், அவருக்கு உடந்தையாக இருக்கும் தனியார் செல்போன் நிறுவன அதிகாரிகளையும், ஊழியர்களையும் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:வீட்டு வாடகை பிரச்னையால் பெண் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சி

ABOUT THE AUTHOR

...view details