சென்னை: இந்திய விமானநிலையங்களின் ஆணையம் தலைவா் (ஏா்போா்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா) சஞ்சீவ் குமாா் 2 நாட்கள் பயணமாக இன்று சென்னை வந்தார். சென்னையில் ரூ.2,400 கோடியில் கட்டப்பட்டு வரும் நவீனமயமான புதிய விமானநிலையத்தை பிரதமா் நரேந்திரமோடி டிசம்பரில், திறக்கவிருப்பது பற்றி ஆலோசனை நடத்துகிறாா்.
இதுகுறித்து, விமான நிலைய அலுவலர்கள் கூறியதாவது, ”இந்திய விமான நிலையங்களின் ஆணையத் தலைவர் சஞ்சீவ் குமார், இரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ளார். இந்த பயணத்தில், சென்னை விமான நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து, உயர் அலுவலர்கள் உடன் ஆலோசனை நடத்துகிறார்.
இதன் பின், சென்னை விமான நிலையத்தில், 2,400 கோடி ரூபாய் மதிப்பில், ஒருங்கிணைந்த விமான முனையங்கள் 2.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்டு வருகிறது. இந்த புதிய முனையம் டிசம்பரில் திறக்கப்பட உள்ளது. இதன் கட்டுமானப் பணிகளையும் ஆணையத் தலைவர் ஆய்வு செய்ய உள்ளார். இதனுடன் இதர சில நிகழ்வுகளிலும் அவர் பங்கேற்கிறார்.
புதிய விமான முனையத்தை பிரமதமர் நரேந்திர மோடி டிசம்பரில் திறந்து வைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. அதுபற்றியும் ஆலோசனை மேற்கொள்கிறாா்”, எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:நீதித்துறையை விமர்சித்தது தொடர்பான வழக்கு - சவுக்கு சங்கருக்கு 6 மாதங்கள் சிறை!